பெரம்பலூர்: மின் ஆளுமையில் மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் !
பெரம்பலூர், அக்.21
பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமையில் மாவட்ட மேலாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:-
பி.இ பி.டெக் (கணினி அறிவியல் பொறியியல் தகவல் தொழில்நுட்பவியல்) அல்லது இளநிலைப் பட்டம் மற்றும் எம்.சி.ஏ எம்.எஸ்.சி (கணினி அறிவியல் எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம்) எம்.எஸ்.சி (மென்பொருள் பொறியியல்) துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
10, 12–ம் வகுப்பு இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் 1.7.2014ம் தேதியில் 21 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதலாண்டு பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையாக மாதம் ரூ. 23,500 வழங்கப்படும். பணி நீட்டிப்பு பெறும்பட்சத்தில் (வேலையை ஆய்வு செய்து கூடுதலாக இரண்டாண்டு காலம் மட்டும் நீட்டிக்கத்தக்கது) 10 சதவிகித கூடுதல் உதவித்தொகை ஆண்டுதோறும் கணக்கிட்டு வழங்கப்படும்.
கல்வி மற்றும் ஆன்லைன் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர் பெரம்பலூரில் பணியமர்த்தப்படுவார். இந்த நியமனம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலானது. மின் ஆளுமை பயிற்றுவிப்புத் திட்டத்தில் நியமிக்கப்படும் நபர் பணிக்கொடை சேமநிதி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கொடைகளுக்கு தகுதியுடையவராக மாட்டார்.
விண்ணப்பங்களை அஞ்சல் அல்லது நேரடியாக திங்கள்கிழமை (அக். 20) முதல் நவ. 5 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
Category: மாவட்ட செய்தி
0 comments