வி.களத்தூர் மேற்கு தெருவில் 64ம் ஆண்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது!
வி.களத்தூரில் மேற்கு தெருவுக்கு பல சிறப்புகள் உள்ளன. மேற்கு தெருவில் ஒரு ஆண் மகனுக்கு திருமணம் நடைப்பெற்றால் அந்த மேற்கு தெருவில் வகிக்கும் அனைவருக்கும் விருந்து சொல்லும் வழக்கம் நமது ஊரில் மேற்கு தெருக்கு மட்டுமே உள்ளது.மேற்கு தெருவில் வகிக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வகிப்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
அந்த மேற்கு தெரு மக்கள் அனைவரும் வசூல் செய்து நேற்றுடன் 64 வருடமாக ஹஜ் பெருநாள் அன்று கொடியேற்று விழாவை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மேலும் மேற்கு தெரு முதல் கபர்ஸ்தான் வரை கயிறு கொடி கட்டி வி.களத்தூரை அழகு செய்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊர் ஜமாத் நிர்வாகிகள் ,மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Category: உள்ளுர் செய்தி





















0 comments