ஹஜ் வீசா முடிவதற்குள் ஹாஜிகள் வெளியேறவும்’ – சவுதி அரேபியா!!
- ஜித்தா : இம்முறை ஹஜ் கடமைக்காக 1.4 மில்லியன் வெளிநாட்டினர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களுள் அனேகமானவர்கள் ஹஜ் கடமையை முடித்துவிட்டு, உரிய நேரத்தில் தங்களது சொந்த நாடுகளுக்குப் பிரவேசித்துவிடுவர். ஆனாலும் சிலர், வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டு வீசா காலாவதியாகியும் சவுதியில் இருக்க முயற்சிப்பதும் வழமையானவையே.எனவே, தங்களது ஹஜ் வீசா காலாவதியாவதற்கு முன்னர் ஹாஜிகள் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவை சவுதி அரேபியா கடவுச்சீட்டுத் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
‘ஓவர் ஸ்டேய்’ எனப்படும் வீசாக்கள் காலாவதியானவர்கள் சவுதியில் தங்குவதும், வேலை தேடுவதும், இவர்களுக்கு தொழில் வழங்குவதும் குற்றம் எனவும், சட்டத்தை மீறும்பட்சத்தில் உரிய தண்டணைகள் வழங்க அரசாங்கம் எவருக்கும் தயக்கம் காட்டாது எனவும் குறித்த திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

Category: வளைகுட செய்தி

0 comments