புனித மண்ணில் தன்னார்வா தொண்டர்களாக மாறிய வி.களத்தூரை சேர்ந்த சகோதரர்கள் நூருல் அமீன், ஹாஜா சரீப்!
-
ஜித்தா மற்றும் மக்காவில பல்லாயிர கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்
இவர்களில் பலர் இந்த வருட ஹஜ் காலத்தில் இந்தியாவில் இருந்து ஹஜ்ஜீக்கு வந்துள்ள ஹாஜிகளுக்கு சேவை செய்யும் தன்னார்வ தொண்டர்களாக மாறினர்
550 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து கொண்டு இந்திய மற்றும் சவுதி துதரங்களின் உதவியோடு தனியான அடையாள ஆடையை அணிந்து கொண்டு இந்திய ஹாஜிகளுக்கு சேவையாற்றும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்
இந்திய ஹாஜிகள் பலர் வழிகளை தவறவிட்டு தங்கள் இருப்பிடத்திர்கு செல்ல முடியாமல் தத்தளிக்கும் போது அவர்களை கண்டறிந்து பாது காப்பாக அவர்களின் இருப்பிடம் கொண்டு சேர்க்கும் பணி உட்பட ஹாஜிகளுக்கு தேவைபடும் பல உதவிகளை இந்த தொண்டர்கள் செய்துள்ளனர்
மேலும் இந்திய ஹாஜிகளுக்கு மொழி பிரச்சனை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பதால் தேவைபடும் சந்தர்பங்பகளில் இந்த தன்னார்வ தொண்டர்கள் மொழி பெயர்பாளர்களாகவும் சேவையாற்றி ஹாஜிகளுக்கு உதவினர்
மொத்த த்தில் புனித மண்ணில் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் தங்கள் வளக்கமான பணிகளில் இருந்து விலகி சேவையாற்றி இருப்பது பாராட்டுக்கு உரியதே
இதில் புனித மண்ணில் தன்னார்வா தொண்டர்களாக மாறிய வி.களத்தூரை சேர்ந்த சகோதரர்கள் நூருல் அமீன், ஹாஜா சரீப் இருப்பது நமது ஊருக்கு பெருமை! நமது ஊருக்கு பரக்கத்!
Category: வளைகுட செய்தி



0 comments