லப்பைகுடிகாடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் பேர் தற்கொலை!
பெரம்பலூர், அக். 7: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி இளவரசி (32). இவர்களுக்கு பரத் (8), சிவபாரதி (7), நித்தீஷ் (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
பாஸ்கரன் சென்னையில் உள்ளதால் இளவரசி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இளவரசி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து மங்கலமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
கல்லூரி மாணவி தற்கொலை:
குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் பிரியா (20). இவர், குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அவரது தாயிடம் பிரியா ரூ. 600 கேட்டதற்கு பணம் இல்லை எனக் கூறிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த பிரியா கல்லூரிக்கு செல்லாமல், வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தற்கொலை:
இதேபோல, குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை.இந்நிலையில், நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சாந்தி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். இதனால் மனமுடைந்த சாந்தி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments