தனது மகளை காணவில்லை என வி.களத்தூர் போலீசில் தந்தை புகார் அளித்தார்!
வி.களத்தூர் .அக்.8:
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் முருகாம்பாள்(18), பிளஸ் 1வகுப்பு வரை படித்த இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கடந்த சில வருடங்களாக பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மதியம் 2 மணி முதல் முருகாம்பாளை காணவில்லை . அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் முருகாம்பாள் கிடைக்கவில்லை. இது குறித்து நேற்று வி.களத்தூர் போலீசில் பெருமாள் புகார் அளித்தார்.இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Category: உள்ளுர் செய்தி
0 comments