வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலன் !அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு !
அபுதாபி இந்திய தூதரகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தியாவிலிருந்து பல்வேறு மாநில அரசு பிரதிநிகள் பங்கேற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்கான “ஸ்டேட்ஸ்” கருத்தரங்கம் சனிக்கிழமை காலை முதல் மாலை இந்திய சோஷியல் மற்றும் கல்சுரல் செண்டரில் நடத்தியது.தமிழகத்தின் சார்பில் மூத்த ஐஏஸ் அதிகாரி ஆனந்த் கலந்து கொண்டார்.
கருத்தரங்கிற்கு அபுதாபி இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் தலைமை வகித்தார். துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கினை லூலூ ஹைபர்மார்க்கெட் அதிபர் எம்.ஏ. யூசுஃப் அலி தொடங்கி வைத்தார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வழிகாட்டி நூலினை அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரதமர் வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.
கோவா மாநில துணை முதல்வர் பிரான்ஸிஸ் டி சொஸா, வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் அதிகாரி ஆர் புஹ்ரில், யுஏஇ எக்ஸ்சேஞ்ச் தலைமை செயல் அலுவலர் சுதிர் குமார் ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய தூதரக சமூக நல கன்சுலர் ஆனந்த் பரதன், இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன், வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் புரடக்டர் ஆஃப் இமிக்ரண்ட்ஸ் ஆர் புஹ்ரில், அல் ஃபரா குரூப் தலைவர் ஜே.ஆர். கங்காரமணி ஆகியோர் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கோவா, ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் அரசு பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது மாநிலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
தமிழகத்தின் சார்பில் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை முதன்மைச் செயலாளர் பி. ஆனந்த் பங்கேற்றார். அவர் வெளிநாடு வாழ் இந்திய தமிழர்களது நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விபரங்களை பட்டியலிட்டார்.
யுஏஇல் 22 லட்சம் இந்தியர்கள் உள்ளதாகவும் இதில் 14 லட்சம் பேர் தொழிலாளர்களாகபணியாற்றி வருவதாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தூதரக அதிகாரி அனந்த் பரதன் பேசுகையில் கடந்த வருடம் அமீரக வாழ் இந்தியர்களால் சுமார் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யுஏஇ எக்ஸ்சேஞ் தலைமை செயல் அதிகாரி சுதீர் குமார் செட்டி பேசுகையில், அதிகப்படியாக இந்தியாவுக்கு அந்நிய செலவாணி ஈட்டி தருவது தொழிலார்கள்தான் எனவும் அதிக வருமானமுள்ள பணியிலிருப்போர் 15லிருந்து 20சதவீதம் பேர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில்லை எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முன்னுரிமை,தொழில் கடனுதவி
தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் கட்டணம் ,மாநிலவாரியாக வெளிநாட்டு வாழ் அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தரப்பில் வலியுறுத்தி பேசப்பட்டது.
இந்திய தூதர் சீத்தாராம் பேசுகையில்,
இந்த கருத்தரங்கம் மூலம் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.இதன் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிகள் தீவிரபடுத்தப்படும்.
நிகழ்ச்சியில் இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் கே.குமார், அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியப் பிரதிகளின் சார்பில் இந்தியன் அசோஷியேஷன், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தாஹா, கும்பகோணம் சாதிக், துபை தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பல்வேறு மாநிலங்களின் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Category: வளைகுட செய்தி
0 comments