விஞ்ஞானத்தை திகைக்க வைத்த திருக்குர்ஆன்....!!
பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடு அடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண் கற்களும் வால் நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன.
இதில் சில கற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும்.
இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும்.
ஆனால் அப்படி நடக்காமல் சீறி வரும் விண்கற்களை இந்த நடு அடுக்கு எரித்து, சாம்பலாக்கி விடுகின்றது.
தப்பித் தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த வகையில் வானம் கூரையாகச் செயல்படுகின்றது.
பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை வெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
இந்த வகையில் பூமியை விட்டு ஒலி, ஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இது அமைந்துள்ளது.
திருக்குர்ஆன் வசனம் :
வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.
திருக்குர்ஆன் 21:32.
நன்றி : யுவான் சுவாங்
Category: குர்ஆண்
0 comments