துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!
துபாய். செப்டம்பர் 13.
துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:30மணியளவில் புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
துபை மண்டல தலைவர் M.அப்துல்லா பாஷா தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம்நடைப்பெறறது .
இந்த மாதத்தில் 4 புதிய உறுப்பினர்கள் புஷ்ராவில் இணைந்தார்கள்.
இக்கூட்டத்தில் வி.களத்தூர் பகுதியிலிருந்து திருமண உதவி ,கல்வி உதவி ,மருத்துவ உதவி என மொத்தம் 13 கடிதம் வந்தன .இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.திருமண உதவிக்கு 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்க பட்டன.
கல்வி உதவிக்கு 25ஆயிரம் ஒதுக்கப்பட்டன.
அடுத்து கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவி கேட்டு வந்த கடிதத்தில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மொத்தம் எவ்வளவு செலவு ஆகுமோ அந்த செலவை முழுவதும் புஷ்ரா நல அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப் பட்டது.
கடந்த ரம்ஜான் பண்டிகையில் வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிக்காடு பகுதியில் ஈத் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்விட் சிறப்பான முறையில் வினியோகிக்பட்டன. அதுபோல வரும் பக்ரீத் பண்டிகைக்கும் சிறப்பான முறையில் வினியோகிக்க முடிவு செய்யப் பட்டது.ரம்ஜான்க்கு ஆர்டர் எடுத்த அதே நபர்கள் பக்ரீத்க்கும் ஆர்டர் எடுப்பார்கள் என தெரிவிக்கப் பட்டது.
அடுத்து புஷ்ரா நல அறக்கட்டளையின் துபாய் மண்டல பொது செயலாளரும்,பிஸ்னஸ் டீம் தலைவரும் A.ஷேக் தாவூத் அவர்கள் சிறிது பேசினார்.புஷ்ரா பிஸ்னஸ் இன்வெஸ்மேட் திட்டத்தில் உறுப்பினர் இல்லாதவர்கள் பலர் சேர்ந்து உள்ளனர் , என்றும் , நமது உறுப்பினர்கள் அனைவரும் சேர்த்து பயன் பெறுமாறு கேட்டுக்ககொண்டார். பின் அனைவருக்கும் தேணீர் கொடுக்கப் பட்டது.கூட்டம் இனிதே நிறைவு பெற்றது
Category: அறக்கட்டளை செய்தி.
0 comments