ஹாஜிகளுக்கு கனிவுடன் சேவையாற்றும் மக்காவின் காவல் துறை!
ஹஜ்ஜை நிறைவு செய்து இறையருளை சுமந்து செல்வதர்காக இலட்சகணக்கானோர் மக்காவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்
மக்கள் வெள்ளத்தில் மக்கமா நகரம் மிதந்து கொண்டிருக்கிறது
ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றும் நாட்கள் நெருங்க நெருங்க மக்கள் அலை அலையாய் வந்து குவிந்து விடுவர்
இறைவனின் அந்த விருந்தாளிகளை உபசரிக்கும் வித த்தில் அவர்களுக்கு சேவையாற்றுவது எப்படி அவர்களுக்கு ஒரு சிறு சிறமம் கூட கொடுக்கமல் பாது காப்பு ஏர்பாடுகளை எப்படி செய்வது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்வதர்காக காவல் துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் இன்று மக்காவில் நடை பெற்றது
அதில் இறைவனின் விருந்தாளிகளுடன் காவல் துறையின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் மக்காவின் பாது காப்பில் ஈடு பட்டு படை வீரர்களும் கனிவுடனும் பணிவுடனும் கண்ணியத்துடனும் பணியாற்ற வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்த பட்டுள்ளதாக ஒரு அதிகாரி செய்தியாளரிடம் தெரிவித்தார்
பல நாடுகளில் இருந்தும் இறைவனின் விருந்தாளிகளாக வந்துள்ளவர்களை பத்திரமா பாது காத்து அவர்களின் கடமைகளை மன நிறைவோடு செய்வதர்கு உரிய அனைத்து ஏர்பாடுகளையும் செய்து கொடுப்பது நமது கடமையாகும் என்றும் அந்த கடமையை பொறுப்பு உணர்ச்சியோடு ஒவ்வொரு காவல் துறையினரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த பட்டது
உண்மையில் ஹஜ் காலத்தில் மக்காவில் காவல் துறையினரின் பணி மகத்தானது
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஹஜ்ஜை நிறைவு செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு இறைவனின் விருந்தாளி காலணியை தவற விட்டு விட்டதால் காலணி இல்லமல் சுட்டெரிக்கும் தரையில் நடந்து வந்த தால் சூட்டை தாங்க முடியாமல் மயங்கும் நிலைக்கு சென்று விட்டார் இதை கண்ட ஒரு காவலர் ஓடோடி வந்து அவரை பிடித்து தனது காலின் மேல் நிறுத்திவிட்டு தனது நண்பரிடம் இருந்து காலணியை பெற்று அவருக்கு அணிவித்து அனுப்பிய நிகழ்வு இன்றும் எனது நினைவில் நிலைத்துள்ளது
Category: வளைகுட செய்தி
0 comments