எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மக்கள் இஸ்லாத்தை நோக்கி…!

ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, டென்மார்க்கில் போராட்டம் நடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஆங்காங்கே இஸ்லாத்திற்கு எதிராக காவிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.
அமெரிக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தடுக்க கோருகிறார்கள்.
பிரான்சில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க அடக்கு முறை ஏவுகிறார்கள்.
சீனாவில் நோன்பு நோற்க எதிர்க்கிறார்கள்.
இலங்கையில் புத்த வெறியர்கள் ஹலாலை புறக்கணிக்க மிரட்டுகிறார்கள்.
பெங்களூரில் பாங்கு சொல்ல தடை கேட்கிறார்கள்.
பல கிராமங்களில் சங்பரிவார அமைப்புகள் மத மாற வேண்டாம் அதுவும் இஸ்லாத்திற்கு மாற வேண்டாம் என கதறுகிறார்கள்.
உலகம் முழுவதும் முஸ்லீம்களை அச்சுறுத்தி இஸ்லாத்தை முடக்க நினைக்கிறார்கள். ஆனாலும் இஸ்லாம் பின் வாங்கவில்லை. இறுதியில் சத்திய கொள்கையே மிகைத்து நிற்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் யாராலும் மூளை சலவை செய்யப்படவில்லை முழுமையான மனதோடு இஸ்லாத்தை ஏற்றுள்ளோம் என்று கூறி உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பனாக. ஆமீன் . .
Category: சமுதாய செய்தி
0 comments