வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடைபெற்றது!
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோச னைக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ராஜன்துரை தலை மையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத் தில் ஏற்படக்கூடும் புயல், வெள்ளத்தினால் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கை குறித்து ஆலோ சனை செய்ய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப் புக்குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ராஜன் துரை தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன் துரை பேசியதாவது:-
உடனுக்குடன்
வடகிழக்கு பருவமழை காலத்தில் வருவாய்த் துறை யினர் தங்கள் எல்லைக்குட் பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்களை உடனுக் குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிப்ப தோடு வட்டாட்சியர் அளவி லான அனைத்து துறை சார் நிலை அலுவலர் களைக் கொண்டு ஒருங்கிணைப்பு குழு அமைத்து அவர்களின் தொடர்பு எண்கள் அனைத்து அலுவலர்களிடமும் தயார் நிலையில் இருக்கும்படி செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்பட் டால் பொதுமக்களை தங்க வைக்க தகுதியான பள்ளிக் கட்டிடம், திருமண மண்ட பங்கள் குறித்து தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண் டும்.
போதிய பொருள் இருப்பு
கூட்டுறவுத்துறையினர் வடகிழக்கு பருவமழை காலத் தில் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் மூன்று மாதங்களுக்கு தேவை யான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் முன் கூட் டியே கையிருப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் இடங்களை பட்டிய லிட்டு அந்த இடங் களில் உடனடி நடவடிக்கைகள் மேற் கொள்ள அனைத்து பொருட் களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மணல் மூட்டைகள்
மேலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டால் அதனை உடனடி யாக அகற்ற மின்ரம்பம், பொக் ளின் எந்திரம் ஆகிய வற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். பொதுப் பணித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கண் மாய்களை தொடர்ந்து கண் காணித்து வரவேண்டும். நீர்வ ரத்திற்கேற்ப நீர்போக்கி களை திறக்கும் வகையில் அவற்றின் இயக்கத்தினை சோதித்து பார்க்கவேண்டும். கண்மாய் கரைகளில் உடைப்பு ஏற்பட் டால் உடனே சீர்செய்ய தேவையான மணல் மூட்டை களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
விழிப்புணர்வு
நீர்நிலைகள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எந்திரங்கள் மூலம் அகற்றும் பணியினை இப்போதே மேற்கொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு மருந்து களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் நோய் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருத்துவ குழு சென்று தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ள மருத்துவ குழு பட்டியல் மற்றும் வாகனங் களை தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும்.
தீயணைப்புத்துறையினர் புயல் மற்றும் வெள்ள நேரங் களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் திட ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொது மக்களை காப்பாற்ற ரப்பர் படகு, உயிர்காக்கும் கருவி களை தயார்நிலையில் வைத் திருக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மழைக் காலங்களில் நல்ல குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், உள் ளாட்சி அமைப்பின் பிரதிநிதி களும், அலுவலர்களும் ஒருங் கிணைந்து செயலாற்ற வேண் டும். பொது மக்களிடையே நீரை காய்ச்சி குடிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப்புத் துறை, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments