சவூதி அரேபியா அல்ஹஸ்ஸா ஹைவேயில் வாகன விபத்து:மூன்று தமிழர்கள் உள்ளிட்ட 6பேர் சம்பவ இடத்திலேயே பலி!
சவூதி அரேபியா: 22.09.2014 அன்று அதிகாலை 1மணியளவில் அல்ஹஸ்ஸாவில் உள்ள அல்முக்தி என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 9 தொழிலாளர்கள் ரியாதில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டனர்.
அல்ஹஸ்ஸாவிலிருந்து ரியாதிற்கு நள்ளிரவில் கம்பெனி வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எகிப்து நாட்டை சார்ந்த ஓட்டுனர் தூக்க அசதியில் தனது கட்டுபாட்டை இழந்ததால்..
விபத்து ஏற்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த ராமநாதன்(வயது- 30),விஜய ராகவன்(வயது- 23),வினோத்(வயது- 25),ஆந்திராவை சேர்ந்த யாத கிரி(வயது- 32),ஹாஜா கான்(வயது- 40)உள்ளிட்ட 5 இந்தியர்களும், 26 வயதுடைய யாசீன் என்ற ஒரு எகிப்தியரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த மற்ற மூன்று நபர்களும் பலத்த காயத்துடன் கிங் பஹத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) அல்ஹஸ்ஸா கிளையின் பொதுசெயலாளர் சகோதரர் யூசுப்கான் மற்றும் சமூக நலத்துறை செயலாளர் சகோதரர் முகம்மது அலி ஆகியோர் இறந்தவர்களின் சடலங்களை தாயகத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Category: வளைகுட செய்தி
0 comments