உலகிலேயே இந்தியாவில்தான் வெளிநாட்டு மாணவர்களுக்கு செலவு குறைவு: ஆய்வில் தகவல்!
மெல்போர்ன்,
வெளிநாட்டு மாணவர்கள் குறைந்த செலவில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்ற நாடாக இந்தியா தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து எச்.எஸ்.பி.சி ரீடெய்ல் பேங்கிங் நிறுவனம் உலக அளவில் 15 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு வெளிநாட்டு மாணவர் கல்வி பயில ஆண்டுக்கு 5642 டாலர்களே செலவாகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 42 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்கள் அடுத்தடுத்து உள்ளன.
இந்தியாவை பொறுத்த வரை ஒரு வெளிநாட்டு மாணவர் ஆண்டுக்கு 581 டாலர்களை பல்கலைக்கழக கட்டணத்திற்காகவும், அன்றாட செலவுகளாக 5062 டாலர்கள் மட்டுமே செலவாகிறது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, பிரான்ஸ், மலேசியா, இந்தோனேசியா, பிரேசில், தைவான், துருக்கி, சீனா, மெக்ஸிகோ மற்றும் இந்தியாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதற்கு காரணம், அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளல், சர்வதேச அனுபவம், தனிச்சுதந்திரம் போன்றவற்றிகாகவே என்கிறது இந்த ஆய்வு.
எனினும், ஆசிய நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக மவுசு காணப்படுவது நிதர்சனம்.
Category: உலக செய்தி
0 comments