தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான ஆலோசனை கூட்டம்: பிள்ளைகளின் வெற்றிக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!
பிள்ளைகளின் வெற்றிக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தேர்வில் தோல் வியடைந்தவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசினார்.
பிளஸ்–2 உடனடி தேர்வு
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 பொதுத் தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 548 மாணவ, மாண வியர்கள் எழுதினார் கள். இவர்களில் 7 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றனர். தோல்வி யடைந்தவர்களில் 263 பேர் உடனடித்தேர்வினை எழுதினார்கள். இவர்களில் 181 மாணவர்கள் தேர்ச்சி யடைந்ததன் காரணமாக இந்த ஆண்டே பொறியியல் கல்லூரி, உயர்கல்வி, பாலி டெக்னிக் உள்ளிட்ட படிப்பு களில் சேர்ந்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 161 மாணவ, மாணவியர்கள் எழுதினார் கள். இவர்களில் 8 ஆயிரத்து 458 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். தோல்வி யடைந்தவர்களில் அரசு பள் ளிகளைச் சேர்ந்த 607 மாணவ, மாணவியர்கள் உடனடித் தேர்வினை எழுதி னார்கள். இவர்களில் 245 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சியடைந்ததன் காரணமாக இந்த ஆண்டே மேல்நிலை படிப்புகளில் சேர்ந்தனர். மீதமுள்ள தோல்வியடைந்த மாணவ, மாணவியர்களில் பலர் ஐ.டி.ஐ படிப்புகளில் சேர்ந்தனர். தேர்ச்சி பெறா மலும், எந்த ஒரு படிப் பிலும் சேராத மாணவ, மாணவியர் கள் 159 பேர் மட்டுமே உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் மூலமாக சிறப்பு கவனம் செலுத்தி அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள வைப்பதற்காக மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–
உறுதுணையாக இருக்க வேண்டும்
தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள் தங்களால் படிக்க இயலவில்லை, படிப்பு வராது என்று மனம் தளர தேவையில்லை. உங்களால் முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கும், உங்கள் பெற் றோருக்கும் வரவேண்டும். தற்போது மீதம் உள்ள தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் களில் ஒரு பாடத்தில் தோல் வியடைந்தவர்கள்தான் அதி கம் உள்ளனர். நீங்கள் அனை வரும் இந்த 15 நாட்களும் ஆசிரியர்கள் சொல்படி கேட்டு பயின்று, அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் வெற்றி பெற் று அடுத்த ஆண்டு மேல் நிலைக்கல்வி, கல்லூரிக் கல்வி யில் சேரவேண்டும். அதற்கான உதவிகளை மாவட்ட நிர்வா கம் செய்து கொடுக்கும். பெற் றார்கள் தங்கள் பிள்ளைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் பாலு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், தங்கராஜ் உள் பட தலைமை யாசிரி யர்கள், மாணவ, மாணவி யர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments