மதுவின் மூலம் மக்களை அழிக்கிறது தமிழக அரசு ! உற்சாக பானங்களையே தடை செய்து மக்களின் ஆரோக்கியத்தை பாது காக்க விரும்புகிறது அமீரக (UAE)அரசு!
சாரய வியபாரத்தின் மூலம் வருகின்ற வருமானத்தில் தான் அரசு இயந்திரம் இயங்கி கொண்டிருக்கிறது என வெட்கம் இல்லாமல் கூறும் ஒரு அரசு தமிழகத்தில் இயங்கி கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
ஒரு நல்லரசு என்பது தனது வருமானத்தில் கவனம் செலுத்துவதை விட தனது குடிமக்களின் ஆரோக்கியத்திலும் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் அரசாக இருக்க வேண்டும்
ஆனால் தமிழகத்தில் இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி மதுக்கடைகளை அரசே நடத்திவரும் அவலத்தை பார்க்கிறோம்
வயது வரம்பின்றி ஆண் பெண் வித்தியாசம் இன்றி அரசு நடத்தும் சாரய கடைகளுக்கு யார் வேண்டும் என்றாலும் சென்று சாரயத்தை வாங்கி குடிக்க முடியும் அவலத்தை கண்டு வரும் நமக்கு U.A.E. அரசு எதிர் வரும் 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து நடை முறை படுத்த போகும் ஒரு திட்டம் நமக்கு ஆச்சிரியத்தை தருவதாக அமையும்
ஆம் 2015 ஆண்டின் துவக்கத்திலிருந்து உற்சாக பானங்களை 20 (energy drinks )வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு விர்பதை தடை செய்ய போகும் திட்டம் ஒன்றை U.A.E அரசு வகுத்துள்ளது
அந்த பானங்களால் இளைஞர்கள் பாதிக்க படுவதை தடுப்பதர்க்காகவும் நாட்டின் எதிர்காலமாக திகழும் இளைஞர்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதர்காகவுமே இந்த திட்டம் என அமீரகத்தை ஆளும் அரசு கூறியுள்ளது
தடை செய்ய பட்ட பிறகு அதை 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விர்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் துபாய் திர்ஹம் வரையிலும் அபாரதம் விதிக்க படும் என அமீரக அரசு அறிவித்துள்ளது
மக்களின் நலம் காப்பதர்க்காக உர்ச்சாக பானங்களுக்கே தடைவிதிக்க விரும் அரசு எங்கே ???
வருமானத்திர்காக தனது குடிமக்களையே போதைக்கு அடிமைபடுத்தும் அரசு எங்கே???
நன்றி : சையது அலி பைஜி.
Category: வளைகுட செய்தி
0 comments