உலகிலேயே குறைவாக செலவு ஆகும் நகரங்களில் ஜித்தாஹ் நகருக்கு முதலிடம்....!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் வணிக நகரமும், அழகிய கடற்கரை நகரமுமான ஜித்தாஹ் நகரம் மிகவும் குறைவாக செலவாகும் நகரமாக தேர்வாகியுள்ளது.
இதை ஆய்வு ரீதியாக தேர்வு செய்தாலும் நம்முடைய அனுபவ ரீதியில் பார்க்கும் போதும் இதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
நான் இதுவரை 7 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். நான் என்னுடைய அனுபவத்தில் பார்த்த வகையில் சவூதி அரேபியாவை பொறுத்தவரை செலவு மிகவும் குறைவாக ஆகிறது.
சவூதி அரேபியாவில் நாம் சம்பாதிக்கும் பணத்தில் கண்ணுக்கு தெரியாமல் அல்லாஹ்வுடைய அருள் நிறைந்திருப்பதை அனுபவத்தில் காண முடியும்.
10 ஆண்டுகளுக்கு முன் 2 பரோட்டா 1 ரியாலுக்கு விற்பனையானது. பத்து ஆண்டுகள் கழித்து இன்றும் 2 பரோட்டா ஒரு ரியாலுக்கு தான் விற்பனையாகிறது.
10 ஆண்டுகளுக்கு முன் 4 இட்லி 2 ரியாலுக்கு விற்பனையானது. 10 ஆண்டுகள் கழித்து இன்றும் 4 இட்லி 2 ரியாலுக்கு தான் விற்பனையாகிறது.
இதேபோல ஒவ்வொரு பொருளும் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல ஜித்தாஹ் நகருக்கு அருகாமையில் அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான மக்கா நகரம் அமைந்துள்ளது. அதேபோல மற்றொரு புனித நகரான மதினா நகரமும் ஜித்தாஹ் சரகத்தில் அமைந்துள்ளது.
அதேபோல உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களையும் சவூதி அரேபியாவில் காணலாம். (இஸ்ரேலை தவிர...)
அதேபோல மதுவுக்கு தடை, விபச்சாரத்திற்கு தடை, திரை அரங்கம் கிடையாது, சினிமா நிகழ்ச்சிக்கு தடை, கேளிக்கை நிகழ்ச்சிக்கு தடை, அழகி போட்டிக்கு தடை என்று இப்படி எந்த செலவும் இல்லாத நாடு.
நிச்சயமாக சவூதி அரேபியாவில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரியாலிலும் அல்லாஹ்வுடைய பரக்கத் நிறைந்து காணப்படுகிறது
Category: வளைகுட செய்தி
0 comments