10ம்வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்ற பெரம்பலூர் மாணவிக்கு பாராட்டு!
பெரம்பலூர்,செப்.24:
எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலஅளவில் ஆதிதிராவிடர் பிரிவில் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 2ம் இடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
2014ம்ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பார்கவி என்ற மாணவி ஆதிதிராவிடர் பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி பார்கவிக்கு அரசால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரையிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.இதனையொட்டி மாவட்ட வருவாய்அலுவலர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவி பார்கவிக்கு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட ரூ.20ஆயிரத்திற்கான காசோலையை மாணவி பார்கவியிடம், டிஆர்ஓ ராஜன்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் முருகேஸ்வரி, ஆதிதிராவிடர் நலம் தனிதாசில்தார் மனோன்மணி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர். மேலும் பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ர மணியன், செயலாளர் விவேகானந்தன் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியை, ஆசிரியர் கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments