நாட்டிற்காகவே வாழும் இஸ்லாமியர்கள் தேசத்திற்காக உயிரையும் கொடுப்பார்கள் : பிரதமர் மோடி கருத்து!
டெல்லி: நாட்டிற்காகவே வாழும் இஸ்லாமியர்கள் தேசத்திற்காக உயிரையும் கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அல்கொய்தா இந்தியாவில் புதிய கிளையை தொடங்கி இருப்பது தொடர்பான கேள்விக்கு, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், என்று அல்கொய்தா நினைப்பதாக குறிப்பிட்டுள்ள மோடி, ஆனால் இந்திய இஸ்லாமியர்கள் தேசத்திற்காகவே வாழக் கூடியவர்கள் என்று குறிப்பிட்டார்.
மோடி மேற்கொள்ள உள்ள அமெரிக்க பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முந்தைய காலங்களில் இந்திய அமெரிக்க உறவில் ஏற்றத் தாழ்வுகள் இருந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் பேசிய அவர் இரு நாடுகளும் சிறந்த கூட்டாளிகளாக திகழ முடியும் என்றார். இரு நாடுகளுக்கிடையிலான உறவு 21-ம் நூற்றாண்டில் புதிய வடிவம் பெறும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில் மோடி அமெரிக்க செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாநில செய்தி
0 comments