சென்னை விமான நிலையத்தில் 8½ கிலோ தங்கம் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது!
சென்னை, செப். 19–
மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது.
இதில் சந்தேகத்துக்குரிய வகையில் நகைகள் அணிந்து வந்த 7 பெண்களிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களில் ஒரு பெண் ‘பிரா’வில் ஒரு கிலோ 400 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் பெயர் சம்பத்ராணி (43). இவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த முருகேசனின் மனைவி என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர மற்ற பெண்கள் கூடுதலாக அணிந்திருந்த தங்க நகைகளுக்கு அவர் களிடம் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.
இன்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சோதனை நடந்தது. அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 7 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதை கொண்டு வந்தவரின் பெயர் மன்மிக்சிங் பரத்வாஜ் (38). மேற்கு டெல்லியைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருக் கும் சிலரிடம் அந்த தங்கத்தை ஒப்படைப்பதற்காக கொண்டு வந்ததாக கூறினார். இதையடுத்து அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அங்கிருந் தவர்கள் தப்பி விட்டார்கள்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவும் இன்று காலையும் மட்டும் மொத்தம் 8 கிலோ 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி
0 comments