வி.களத்தூர் தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற ஈத் பெருநாள் திடல் தொழுகை !!
வி.களத்தூர் தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நமது ஊரில் தவ்ஹித் மர்கஸ் அருகில் உள்ள ஈத் திடலில் ரம்ஜான் பெருநாள் ஈத் தொழுகை 7:00 மணி அளவில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.தொழுகை முடிந்த உடன் குத்பா பேருரை நடைப்பெற்றது .
அந்த உரையில் சகேதாரர் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்த அனைத்து நல்லொழுக்கங்களையும் ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர வேண்டும், ஆனால் அதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் விட்டுவிடுகின்றனர் இப்படி ரமலான் முஸ்லிமாக இருக்கக்கூடாது என்று பேசினார்.இந்த திடல் தொழுகையில் சுமார் பெண்கள் உட்பட 250க்கும் கலந்துக் கொண்டனர்.
பின் அனைவரும் ஒருவருக்கொருவர் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்கள் .












Category: உள்ளுர் செய்தி
0 comments