மில்லத் நகரில் நடைபெற்ற ரம்ஜான் நோம்பு பெருநாள் கொண்டாட்டம்!
இன்று காலை சரியாக 8.30 மணியளவில் மில்லத் நகர் பள்ளி வாசல் மைதானத்தில் ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரைநிகழ்த்தப்பட்டது. இந்த சிறப்பு தொழுகையில் 750க்கும் அதிகமான ஆண்கள் கலந்துக் கொண்டு தொழுதனர்.
மைதானம் முழுவதும் நிறைந்துவிட்டதால் அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு ஒவ்வொருவரும் தங்கள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
பின் மில்லத் நகர் கபர்ஸ்தான் சென்று ஜியாரத் செய்தனர்.

















Category: உள்ளுர் செய்தி
0 comments