தற்கொலைக்கு எதிராய் ஒரு தடுப்பு முயற்சி!
ஆசிரியர் திட்டியதால் மாணவர் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி...பிளஸ் 2 மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி என தொடர்ச்சியாக பல கொடூர மரணங்கள் நம் கண் முன்னால் நடந்து வருகிறது. இவர்கள் அனைவருமே வளர் இளம் பருவத்தில் உள்ளவர்கள். மனதைப் பகிர்ந்து கொள்ள நட்பான சூழலும், சிக்கலான நேரங்களில் ஆதரவாகப் பேசவும் ஆளில்லாத நிலையில் இந்த தவறான முடிவை எடுக்கின்றனர். இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்கொலையில் தமிழகம் முதலிடம் வகிப்பது கவலையளிக்கிறது.
எதிர்மறை எண்ணங்களில் இருந்து குழந்தைகளை எப்படி தன்னம்பிக்கையாளர்களாக மாற்றலாம் என்பது பற்றிக் கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் செந்தில்குமார் கூறுகையில்,
“தன்னைப் பற்றி அறியாத நிலையில் மாணவர்கள் இது போன்ற அசட்டுத் தனமான முடிவுகளை எடுக்கின்றனர். மாணவர்களின் குறைபாடுகள் மட்டுமே பெரிதுபடுத்தப்பட்டு அதற்காக தண்டிக்கப்படுவது மற்றும் கடுமையான வார்த்தைகளையும் சந்திக்கும் போது மனதில் எதிர்மறை எண்ணங்கள் வலுக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபம் உணர்வுகளின் புயலை மனதுக்குள் உருவாக்குகிறது. இந்தப் புயல் பகுத்தறிவை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. இப்படியான சிக்கால நேரங்களில் மாணவர்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.
மாணவர்களிடம் காணப்படும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக் கூட தயங்காமல் பாராட்ட வேண்டும். அதன் பின்னர் குறைபாடுகளை மறை முகமாக சுட்டிக் காட்டி அதில் இருந்து வெளிவருவதற்கான வழிகளையும் திறந்து விட வேண்டும். வளர் இளம் பருவத்தில் உடல், மன ரீதியான மாற்றங்களை எளிதில் கையாளவும் கற்றுத் தருவது அவசியம். தன்னிடம் எந்தத் திறன் அதிகமாக உள்ளது, எதில் பலவீனமாக உள்ளோம், எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற புரிதலை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்களை தன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். சிக்கலான நேரங்களில் யோசித்து சரியான முடிவு எடுப்பதற்கு இது போன்ற அணுகுமுறையே உதவும்.
கோபம், வறுத்தம், அன்பு என தனது உணர்வுகளை புரிந்து கொள்ள பழக்க வேண்டும். குழந்தைகளிடம் எட்டு விதமான 'பிரைமரி எமோஷன்ஸ்', இரண்டு விதமான 'செகன்டரி எமோஷன்ஸ்' உள்ளது. இதன் தன்மைகள் குறித்து பெற்றோர் தெரிந்து கொள்வதுடன் அவற்றை கையாள்வதற்கான பயிற்சிகளையும் அன்றாட சம்பவங்களின் மூலம் அளிக்கலாம்.
ஒரு விஷயத்துக்காக பொறுமையாக காத்திருப்பது, தோல்வியை ஏற்றுக் கொள்வது, அதிலிருந்து மீள தன்னை பகுப்பாய்வு செய்வது, தன்னிடம் உள்ள நிறை குறைகளை பட்டியலிட்டு சரி செய்வது, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, எந்த ஒரு சிக்கல் வரும் போதும் அதற்கான மாற்று வழிகளை யோசித்து அந்தப் பிரச்னையில் இருந்து எளிதில் வெளி வருவதற்கான சூழலை உருவாக்குவது என பல விஷயங்களையும் அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர் ஆசிரியர் இருவருக்கும் உண்டு.
உலகளவில் துவக்கத்தில் தோல்வியை சந்தித்தவர்கள், பள்ளியில் இவன் உருப்படவே மாட்டான் என துரத்தப்பட்டவர்கள் மிகப்பெரிய உயரங்களை எட்டியுள்ளனர். உணர்வுகளை அறிவுப் பூர்வமாக சிந்தித்து ஆளத் தெரிந்தவர்களுக்கு இந்த வெற்றிகள் சாத்தியமாகியுள்ளது.
எனவே நம் குழந்தைகளுக்கும் 'எமோஷனல் இன்டலிஜென்ஸ்' அதாவது உணர்வுகளை மிகச் சரியான வழியில் மேலாண்மை செய்ய வழக்கப்படுத்தி விட்டால் அவர்களை வெற்றியாளர்களாக பரிமளிக்கச் செய்ய முடியும். தற்கொலை எண்ணம் எந்த சூழலிலும் எட்டிப் பார்க்காது,” என்கிறார்.

Category: மாணவர் பகுதி

0 comments