தாட்கோ பொருளாதார திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!
தாட்கோ மூலம் ஆதி திராவிடர்களுக்காக செயல் படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங் களுக்கு இணைய தளம் மூலம் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நிலம் வாங்கும் திட்டம்
தாட்கோ மூலம் ஆதிதி ராவிடர்களுக்காக செயல் படுத்தப்படும் பொருளாதார மேம் பாட்டு திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. பெண்க ளுக்கான மகளிர் நிலம் வாங்கும் திட்டம், இருபால ருக்கான நிலம் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 55 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
சுய வேலைவாய்ப்பு திட்டம்
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 35 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும். வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிப் பவர் ஓட்டுநர் உரிமம் மற்றும் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் முனைவோர் பொருளாதார திட்டத்தின் கீழ் பெட்ரோல் டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 55 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் மூன்று லட்சமாகும்.
இணையதளத்தில்
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் அரசு இணையதள முகவரியான
http://application.tahdco.com/
சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமான சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றுக்கு பள்ளி மாற்றுச் சான்றுகள், வாக்காளர் அட்டை ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை மதிப்பெண் சான்றுகள் இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப் படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட மேலாளர் அலுவலகம்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப் படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் ரூ.20/– செலுத்தி விண்ணப் பிக்கும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி

0 comments