முசாபர் நகர் கலவரம் குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ்!
முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தின்போது, புகானா பகுதியில் சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவு குற்றவாளிகளின் வீடு மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான நோட்டீசை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் ஒட்டியுள்ளனர். இதுதவிர, பொது இடங்களிலும் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்‘ என்று கூறப்பட்டுள்ளது.இதுபோல், முசாபர் நகர் அருகே லங்க் கிராமத்தில் கலவரத்தின்போது 3 பேரை கொலை செய்யப்பட்டனர். இதில் 25 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்குமாறு, வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு படையினர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
Category: மாநில செய்தி
0 comments