சவுதியில் சட்டவிரோதமாக தங்கிய இந்தியர் உள்பட 700 பேர் கைது!
ரியாத் : சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிய இந்தியர்கள் உள்பட 700 வெளிநாட்டினரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட, நிதாகத் சட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களில் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால், இந்தியர்கள் உள்பட லட்சகணக்கான வெளிநாட்டினர் வேலை இழந்தனர். இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை சரி செய்து கொள்ளவும், அவ்வாறு செய்யாதவர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
தற்காலிக வேலைக்காக வந்த ஏராளமான இந்திய தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ரியாத்தில் கடந்த சில நாட்களாக அந்நாட்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கிய ஏமன், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 700 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் காய்கறி விற்பவர்கள், சிறு வியாபாரிகள். அல் யூனுஸ் மாவட்டத்தில் மட்டும் இதுபோல் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹய் அல் வசாரா பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த முறையான ஆவணங்கள் இல்லாத 9,000 பேரை கைது செய்துள்ளதாக ரியாத் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சில இடங்களில் போலீசாரின் சோதனையை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஏராளமானோர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இதேபோல் கிழக்கு மாகாண பகுதியில் 19,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1,900 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Category: வளைகுட செய்தி
0 comments