லாரி மோதி பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளரான ஜெ. சர்புதீன் மரணம்!
மீண்டும் ஒரு கம்பீரமான காக்கியை இழந்தது பெரம்பலூர் காவல்துறை..
நேற்று பெரம்பலூரில் மூன்றாவது புத்தக கண்காட்சி துவங்கியது.. மாவட்டம் முழுக்க ஒரு திருவிழாவைப்போல் மக்கள் முகத்தில் சந்தோசம் ஒளிவீச துவங்கிய நேரத்தில் பேரதிச்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து நிற்கிறார்கள் நான் உட்பட்ட பெரம்பலூர் வாசிகள்.
கடந்த 28.07.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த செல்வம் கார்விபத்தில் இறந்துபோனார். அதே கம்பீரமுடைய ஒரு ஆய்வாளரை இழந்து நிற்கிறோம்.
இன்ஸ்பெக்டர் சர்புதீன், பெரம்பலூர் நகரத்தில் சிரித்த முகத்தோடு நேற்று இரவு வரை வலம்வந்தவர்..
நேற்று மாலை பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் துவங்கிய நேரத்தில் வாசலில் நின்றபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். வணக்கம் சார், நலமா என கம்பீரமாக அந்த குரல் பலரையும் நலம் விசாரித்தது. ஏனெனில் புத்தகத்திருவிழா பல நண்பர்களை சந்திக்கும் நிகழ்வாக இருந்துவருகிறது. புத்தக திருவிழா முதல்நாள் நிகழ்வு முடிந்ததும், அடுத்த வேலைக்கு ஆயத்தமான இன்ஸ்பெக்டர் சர்புதீன்.
கவுல்பாளையம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். வாகனத்தின் வேகத்தை குறைக்க அந்த இடத்தில் ஒரு பேரிகார்ட் அமைக்கப்பட்டிருந்ததாம். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று வேகத்தை கட்டுபட்டுத்த முடியாமல், கேட்டில் மோத லாரியின் பின்புறம் இன்ஸ்பெக்டர் சர்புதீன் மீது மோதிவிட, தூக்கி எரியப்பட்ட சர்புதீன் தார் சாலையில் விழாமல், மணல் சாலையில் மல்லக்க விழுந்தார். தலையில் உடலில் ஏதும் காயமில்லை. காது, மூக்கு, வாய் வழியாக தொடர்ந்து நிற்காமல் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்க, அடுத்த சிலமணி துளிகளில் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது மற்றும் கவல்துறை அதிகாரிகள் பதறியடித்தபடி ஓடி வந்தார்கள். அடுத்த ஒருமணிநேரத்தில் திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சர்புதீன். மலைக்கோட்டை மாநகரில் பீமநகர்தான் சர்புதீனுக்கு சொந்த ஊர். ஓடியாடி விளையாடிய அதே ஊரில் அசைவுகளற்று கிடந்தார் இன்ஸ்பெக்டர். 48 மணிநேரம் கெடு என மருத்துவர்கள் சொல்ல மேலும் பதற்றம் நம்மை போன்றவர்களை தொற்றிக்கொள்ள பதறினோம். கொஞ்சம் முன்னேற்றம் நமக்கு 4மணிக்கு மேல் கிடைத்த தகவல்.
ஒரு நேர்மையான, சாதாரணமானவர்களை மதிக்கிற அதிகாரியாய் அவரை மிகவும் பிடிக்கும் இந்நிலையில் சரியாக நேற்று இரவு 10:30மணியளவில் ஒரு தகவல் சார் இன்ஸ்பெக்டர் இறந்துட்டாராம் என்பதுதான் அந்த செய்தி..
எதுவும் சொல்லமுடியாமல் சில நிமிடங்கள் கடந்தோம், அடுத்து வழக்கம் போல இருந்துவிட்டோம். இதுதான் சார் வாழ்க்கை என பல போலீஸார் சொல்கிறார்கள்.
மக்களை நேசிக்கிற சில போலீஸ்காரர்களுக்கு நேரும் வேதனைகளும் மரணங்களும் வேதனை அதிகரித்துக்கொண்டே செல்கீறது.
இதுகுறித்து கார் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தே. சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து அரும்பாவூர் காந்திநகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் கார் ஓட்டுநர் ரவிச்சந்திரனை (24) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Category: இறப்புச் செய்திகள், மாவட்ட செய்தி
0 comments