கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? ஸ்கேன் செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை! மருத்துவமனைகளுக்கு கலெக்டர்தரேஷ்அஹமது எச்சரிக்கை!
பெரம்பலூர், பிப்.13:
கருவில் இருப்பது ஆணா, பெண் ணா? என கண்டறிந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனைகளுக்கு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் கிராம சுகாதார செவியர்கள் 90பேர்களுக்கு மடிகணினி வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. சுகாதாரத்துறை துணைஇயக்குநர் ரவீந்திரன் வரவேற்றார். விழாவில் பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஷ்அஹமது தலைமை வகித்துப் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டம் சுகாதாரத்துறையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்த மடிகணினியைக் கொண்டு கிராமப்புறங்களில் கருவுற்ற தாய்மார்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதோடு, டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை திறம்பட செயல்படுத்த மடிகணினி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 70சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறப்பது மாவட்ட நிர்வாகத்தின் மீதும், சுகாதாரத்துறைமீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத் துக்காட்டுகிறது. இருந்தும் ஒரே தம்பதிக்கு மிகஅதிகமாக குழந்தைகள் பிறப்பது கட் டுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன்மூலம் கண்டறிந்து தெரிவிப்பதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டப்பூர்வ தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அருகிலுள்ள நெய்வேலிக்குச் சென்று குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிவது குறித்து அறியப்பட்டதால் குறிப்பிட்ட நர்சிங்ஹோம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி அந்த மருத்துவமனைக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த மருத்துவமனைக்கு சீல்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து கிராமப்புற செவிலியர்கள் 90பேர்களுக்கு தமிழகஅரசின் இலவச மடிகணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட் சிக்குழு தலைவர் சகுந்தலா கோவிந்தன், வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், நகராட்சி துணை த்தலைவர் ஆர்.டி.ர �மச்சந்திரன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்ரமணியன், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட விரிவாக்கஅலுவலர் டாக்டர் அரவிந்தன், வட்டார மருத்துவர்கள் வசந்தா, மகாலட்சுமி, சேசு, வளவன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
சுகாதாரத்துறை உதவிஇயக்குநர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி
0 comments