பெரம்பலூர் அருகே பரிதாபம் !கிணற்றில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது!
பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுமத்தூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலநாதன் மனைவி மாலதி (20). இவர், செவ்வாய்க்கிழமை மாலை துணி துவைப்பதற்காக தனது 9 மாத குழந்தை குணசீலனை தூக்கிக்கொண்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளைக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது, அங்குள்ள வனப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடு மாலதியை முட்ட வந்தபோது, அவர், நிலைதடுமாறி குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிணற்றில் விழந்தவர்களை மீட்டனர். இதில், குழந்தை குணசீலன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாலதியின் தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் வழக்குப் பதிந்துள்ளார்.
இளைஞர் தற்கொலை: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் லோகநாதன் (35). கடந்த ஓர் ஆண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குன்னம் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments