எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்!
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:
பணியின் விவரம்:
1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்
தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 31.12.2012 அன்று 40க்குள்.
சம்பளம்: ரூ.19,400 – 700/ 1 – 20,100 – 800/ 15 – 32,400. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு புரொபேஷன் காலத்திற்கு பின்னர் மேனேஜர் அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
2. அசிஸ்டென்ட் மேனேஜர்
தகுதி: வணிகவியல்/ வணிக மேலாண்மை/ கணிதம் ஆகிய பாடங்களில் முதல் தர தேர்ச்சியில் முதுநிலை பட்டம். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது: 31.12.2013 அன்று 26க்குள். மிகவும் பிற்பட்டோர் மற்றும் பிற்பட்டோருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 8 – 26,500.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500. இதை தூத்துக்குடியில் செலுத்ததக்க வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் பெயருக்கு டிடி எடுக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.tmb.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E.Road,
Thoothukudi-628002.
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E.Road,
Thoothukudi-628002.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.2.2014.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.2.2014.
Category: வேலைவாய்ப்பு
0 comments