.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மத்திய ரிசர்வ் காவல் படையில் தலைமை காவலர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு!

Unknown | 7:30 PM | 0 comments

மத்திய ரிசர்வ் காவல் படையில் அமைச்சரவை தலைமை காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்கள் : 482 (பொது - 441, முன்னாள் ராணுவத்தினர் - 41)

விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 12, 2014

தொலைதூர இடங்களுக்கான கடைசி தேதி - மார்ச் 19, 2014

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இண்டர்மீடியட் (10+2) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தி தட்டச்சு முறையில் 30 வார்த்தைகளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: 5200 - 20200. (கிரேட் பணம் ரூ.2400)

வயது வரம்பு: 12.3.2014 அன்று 18 வயது முதல் 25 வயது வரை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்கு சில வயது வரம்பில் சில தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை இரண்டு விதமாக நடைபெறும். 

முதல் கட்டம்: சான்றிதழ் / ஆவணங்களை ஆய்வு செய்தல், உடல் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவை

இரண்டாம் கட்டம்: திறனறி தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை

எழுத்து தேர்வின் விவரங்கள்:
பகுதி 1: ஹிந்தி / ஆங்கில மொழி
பகுதி 2: பொது அறிவு
பகுதி 3: எண்ணியல் திறன்
பகுதி 4: எழுத்து திறன்

மொத்த மதிப்பெண்கள்: 200

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. குறிப்பிட்ட மையத்தின் DIGP, GC, மற்றும் CRPFக்கு செல்லுபடியாகும் விதத்தில் போஸ்டல் ஆர்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அனைத்து மகளிர் விண்ணப்பதாரர்கள், இட ஒதுக்கீட்டு பிரிவின் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு.


எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பத்தை சி.பிஆர்.எஃப் அலுவலக வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். பிறகு, “Application for Special Recruitment for the Post of Head Constable (Ministerial) in CRPF” என்று உறையின் மேல் எழுதி அங்கீகரிக்கப்பட்ட 36 மையங்களின் அளிக்கலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1