திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட்அமைக்க வேண்டும்.பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
அத்தோடு திருச்சி மாநகரில் சத்திரம் என்ற இடத்திலும் ஒரு பஸ்ஸ்டாண்ட் உள்ளது. இங்கு பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட, சில மாவட்ட பஸ்களும், டவுன் பஸ்களும் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றன. திருச்சி மாநகரில் இரு பஸ்ஸ்டாண்ட் உள்ளதால், பயணிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகள் மாறிமாறி வந்தும், இதுவரை மாநகர மக்களின் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த தி.மு.க., ஆட்சியில் பஞ்சப்பூர் அருகேயும், தேவதானம் அருகேயும் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க இடம் பார்க்கப்பட்டது. பின் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போதுள்ள அ.தி.மு.க., அரசோ, ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க அரசு அதிகாரிகள் மூலம் ரகசியமாக நிலம் பார்ப்பதாக தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்டை சுற்றி ஹோட்டல்கள், லாட்ஜ்கள் வைத்துள்ளவர்கள், தி.மு.க.,-அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டை இடம் மாற்ற, அவர்கள்தான் முட்டுக்கட்டு போட்டு வருகின்றனர் என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது.
அதேபோல் சுயலாபத்துக்காக சில அரசியல்வாதிகள், ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைந்தால், திருச்சி மாநகர மக்கள் பெரிதும் பயனடைவர். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களிடம், ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைப்பதாக வாக்குறுதி கொடுப்பவருக்கே ஆதரவு கொடுக்க, திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு நகர் நல அமைப்புகளும், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் வாக்குறுதியை கொடுத்து, யார் திருச்சி மாநகர நகர்நல அமைப்புகளின் ஆதரவை பெறப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Category: மாநில செய்தி
0 comments