ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் உணவு கேட்டு விமான ஊழியர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்ட பயணிகள்!
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ-433 விமானம் 50 பயணிகளுடன் நேற்று பிற்பகல் கயாவிலிருந்து வாரணாசி வழியாக டெல்லி புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கமாக கொடுக்கப்படும் காலை உணவிற்குப் பதிலாக பிஸ்கட், டீ கொடுத்து உபசரித்துள்ளார்கள். இதனை எதிர்பார்க்காத சில பயணிகள் தங்களுக்கு உணவு அளிக்கும்படி கேட்க இணை விமானி ஒருவரும் பயணிகளிடம் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இதனால் எரிச்சலுற்ற சில பயணிகள் நடுவானிலேயே தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பீங்கான் தட்டுகள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மாலை 5 மணி அளவில் விமானம் பபட்பூரில் உள்ள லால்பஹதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும் பயணிகளில் சிலர் கீழிறங்கி தங்களின் டிக்கெட் பணத்தினை திரும்ப அளிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை மேலாளர் கே.பி.சிங் தலையிட்டு அனைவரையும் சமாதானப்படுத்தினார். அதன்பின்னர் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் ஊடகங்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் காலதாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு கிளம்பியது. அதற்கான காரணத்தை குறிப்பிடாத விமான நிலைய மேலாளரான சந்தோஷ் சௌபே நடந்த சம்பவம் குறித்து கேட்டபோதும் பதிலளிக்கவில்லை என்று பத்திரிகை தகவல்கள் தெரிவித்தன.

Category: மாநில செய்தி
0 comments