இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகும்: அமெரிக்கா கணிப்பு!
இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியதாவது: . பொறுப்புள்ள, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் நாடாக இந்தியா திகழும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவுடனான ராணுவ உறவை பலப்படுத்தவும், சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து பணிபுரியவும் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வர்த்தக உறவு மேம்பட வேண்டும். இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவதை இது ஊக்குவிக்கும் இவ்வாறு சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
Category: உலக செய்தி
0 comments