திருச்சி விமான நிலையத்தில் விரைவில் 3வது ஏரோபிரிட்ஜ் அமைக்கப்படும்!
திருச்சி,: திருச்சி விமான நிலையத்தில் 3வது ஏரோபிரிட்ஜ் விரைவில் அமைக்கப்பட உள்ளது என நிலைய இயக்குநர் ஜெபராஜ் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) ஜெபராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகை யில், திருச்சி விமான நிலையத்துக்கு மொத் தம் 3 ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து 3வது ஏரோபிரிட்ஜ் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் 3வது ஏரோ பிரிட்ஜ் அமைக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்து அதற்கான நிதி யும் ஒதுக்கியுள்ளது. விரை வில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெறும். இதன் மூலம் பயணிகள் எளிதாக விமா னத்தை விட்டு முனைய கட்டடத்துக்கு செல்ல முடி யும். அதுபோல நிர்வாக பிரிவுக்கும் புதிய கட்டடம் கட்ட வும் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் நடைபெறவுள்ளன இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய தீய ணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரி யாதையை இயக்குநர் ஏற்றுக்கொண்டார். சிஐஎஸ் எப் உதவி கமாண்டன்ட் சைனி, சுங் கத்துறை உதவி கமிஷனர் ஜாங்கிட், முதன் மை இமிகிரேசன் அதிகாரி ரமோலா, பத்ரா வாசு தேவன் உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ் ச்சியை தொடர்ந்து விமான நிலையம் எதிர்புறம் உள்ள விமான நிலைய ஊழி யர் குடியிருப்பில் உள்ள பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் இயக்குநர் ஜெபராஜ் தேசியக் கொடி யேற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஏரோபிரிட்ஜ் என்பது...
ஏரோபிரிட்ஜ் என்பது விமானத்தில் வரும் பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்காமலேயே நவீன பாலம் மூலம் விமான நிலைய முனையக் கட்டடத்துக்குள் செல்ல முடியும். அவ்வாறு அமைக்கப்பட்ட பாலம் போன்றதொரு அமைப்புக்கு ஏரோ பிரிட்ஜ் என்று பெயர். இது மிகவும் பாதுகாப்பானதும், இலகுவானதும் கூட.
Category: மாநில செய்தி
0 comments