கற்கும் திறனை மேம்படுத்த ‘தூங்கும் பாடத்திட்டம்’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!
பள்ளி வகுப்புகளின் இடையே பிள்ளைகள் சோர்வடைந்து விடுவதால், அவர்களால் உற்சாகத்துடன் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது.
பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்பாக கூர்ந்து கவனித்து வந்த சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர்.
இதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மழலையர் வகுப்பு பிள்ளைகள் உறங்க வைக்கப்பட்டனர். இந்த புதிய திட்டம் கைமேல் பெரிய பலனை தந்துள்ளது. ஓய்வுக்கு பின்னர் கண் விழித்த பிள்ளைகள், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உற்சாகத்துடனும், அறிவுக் கூர்மையுடனும் படிப்பில் நாட்டம் செலுத்துவதை பார்க்க முடிந்தது.
இதர மேல்வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தலாமா? என்பது தொடர்பாக சீன அரசின் கல்வித்துறை அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.
Category: உலக செய்தி
0 comments