ஏர்-இந்தியா விமானங்களில் இணையதள வசதியை அளிக்கும் திட்டம்!
இந்திய விமானப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப்பயணங்களில் இணையதள வசதியை(வை-பை இணைப்பு) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்முறைகள் குறித்து ஆய்வதற்காக ஏர் இந்தியாவின் தலைவர் ரோஹித் நந்தன் அந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். விமானத்திற்குள் பொழுதுபோக்கு குறித்த இணைப்புகளை ஏற்படுத்தித் தருவதில் உலகளவில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழும் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்தை இது குறித்த ஒரு திட்டமிட்ட அறிக்கையை அளிக்குமாறு ஏர்-இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் இத்தகைய வசதிகளை வழங்கிவருகின்றன. இதற்காக அந்நிறுவனங்கள் பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் வசூலிக்கின்றன.ஆனால் இதுவரை இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.எனவே இந்தத் திட்டத்தின் சாதக, பாதக பலன்கள் குறித்து இந்திய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு இதுகுறித்து முடிவெடுக்க உள்ளதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏர்-இந்தியா நிர்வாகம் ஏற்கனவே பல கோடி கடன்சுமையினால் நிலைத்திருக்கப் போராடிவருகின்றது. ஜெட் எதிஹாட் நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை விரைவில் துவங்க உள்ள டாட்டா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்-இந்தியாவின் அயல்நாட்டு சேவைகளுக்குப் பெரிய போட்டியாக விளங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏர்-இந்தியாவின் சர்வதேசப் போக்குவரத்துகளில் கிட்டத்தட்ட 70 சதவிகித பயணங்களில் இந்தப் புதிய நிறுவனத்தின் சேவைகள் தலையிடக்கூடும். உள்நாட்டுப் போக்குவரத்திலும் ஜெட் இண்டிகோ குழுமங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் சர்வதேசப் போக்குவரத்துப் பங்கு வர்த்தகத்தில் போராட ஏர்-இந்தியா ஸ்டார் அலையன்ஸ் கூட்டணியை ஏர்-இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. இத்தகைய நிலையில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக வை-பை இணைப்புத் திட்டம் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: மாநில செய்தி
0 comments