V.களத்தூர் அருகே விசுவக்குடி அணையில் மேடுகளை அகற்றி ஆழப்படுத்தினால் 10 மில்லியன் கனஅடி கூடுதல் தண்ணீர்-விவசாயிகள் கோரிக்கை!!
பெரம்பலூர், செப். 5:
கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் விசுவக்குடி அணையின், உட்புறமுள்ள மேடுகளை அகற்றி, ஆழப்படுத்தி, மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகள் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராமராஜன், சென் னையில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழ ங்கல் துறையின் தமிழ்நாடு அரசுச் செயலர் பனீந்திரரெட்டி ஆகியோரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட் டம், V.களத்தூர் அருகில் விசுவக்குடி அருகே செம்மலை, பச்சை மலை ஆகியவற்றின் இடையே, கல்லாற் றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப் பீட்டில் புதிய அணை கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலெக்டர் தரேஸ் அஹ மது மேற்பார்வையில், பொதுப்பணித்துறையின ரால் நடந்து வரும் விசுவக் குடி அணைக்கட்டில் 30.67மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்குவதற்கு ஏதுவாக அதன் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் கட்டப்படும் இர ண்டு மதகுகள் மூலம் விசுவக்குடி, தொண்டமாந் துறை,V.களத்தூர் ஆகிய கிராமங்களைச் சார்ந்துள்ள 859 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இதன்
மூலம் 423 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கு தேவையான நீர் தேவை உறுதி செய்யப்பட்டுள் ளது. மேலும் கிண ற்று பாசனம் பெறக்கூடிய பகுதி 168.50 ஏக்கராக அதிகரி க்கும். தற் போது கான்கிரீட் கலுங்குகள் அமைக் கும் பணி நடந்து வருகிறது. 2ஆண்டு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டு விரை ந்து நடைபெற்று வரும் இப்பணி 2014 செப்டம்பரில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணைக்கட்டு நடுவேயும், தண்ணீர் வரும் வழியிலும் இயற்கையாக அமைந்துள்ள மிகப்பெரிய மேடுகள் உள்ளன. இந்த மேடுகளை அகற்றி, திட்டப்பணி கள் நடைபெற்று வரும் வழியாக அவற்றை வெளியேற்றி, நீர்ப்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்த வேண்டும். இதனால் திட்டத்தின் முழு கொள்ளளவான 30.67 மில்லியன் கனஅடி தண் ணீரைப் பெறுவதோடு, மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் கூடுதலான நீர்ப்பிடிப்பை உருவாக்க முடியும். இவற்றால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீரையும், பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் பெற முடியும்.
இதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட இயற்கைமேடு பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு அவற்றை அகற்ற தேவை யான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசுவக்குடி தடுப்பணையின் புகைப்படத் தொகுப்பு.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
நன்றி :
அக்பர் அலி.ச (புகைப்படம் உதவி)
Category: மாவட்ட செய்தி
0 comments