.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உலாமாக்கள் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்...தமிழக அரசு அறிவிப்பு .!!

Unknown | 10:00 PM | 0 comments

உலாமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலைமையில் உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் கூட்டம் நடைபெற்றது.

உலமா ஓய்வூதிய திட்டத்தின்படி பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம், மோதினார், மதரசாக்களில் பணிபுரியும் அரபி ஆசிரியர் மற்றும் தர்காக்களில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் உலமாக்களாக கருதப்படு கின்றனர்.

இவர்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு நிவாரணம் வழங்குமுகமாகவே அரசு இத்திட்டத்தைத் துவக்கியது. 60 வயது நிரம்பிய 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேஷ் இமாம், மோதினார், அரபி ஆசிரியர் மற்றும் முஜாவர் போன்ற உலமாக்கள் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள்.

உலமா ஓய்வூதிய பயனாளிகளில் எண்ணிக்கையை அரசு 2400 லிருந்து 2600 ஆகவும் மாதம் ரூ.750/-ஆக இருந்த ஓய்வூதியத் தொகையினை ரூ.1,000/- ஆகவும் உயர்த்தி உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது ஓய்வூதியமாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, 10.07.2013 நாளிட்ட அரசாணை எண் 55ன் படி பயனாளிகளைத் தேர்வு செய்ய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமையில் உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு திருத்தி அமைக்கப்பட்டது.

அப்துல் ரஹீம் தலைமையிலான உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு செப்டம்பர் 2ம் தேதி காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு உறுப்பினர்களான ஹாபிஸ் செய்யது முஹம்மது ஷரீப், வேலூர், மௌலவி முஹம்மது உபயதுல்லா, சென்னை, மௌலவி முஹம்மது வலியுல்லா, வாணியம்பாடி, மௌலவி முஹம்மது இஸ்மாயில் பாகவி, நீடூர், மெயலவி நூர் சிராஜி, சேலம், மௌலவி கூ.து.ஆ.சலாவுதீன் ரியாஜி, திருநெல்வேலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலமாக்கள் ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழுவினை திருத்தி அமைத்து உத்தரவிட்டு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் எண்ணிக்கையை உயர்த்தி உத்தரவிட்ட முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் குழுவில் 128 உலமாக்களுக்கு ஓய்வூதிய ஒப்பளிப்பு வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள உலமாக்கள் அனைவரும் முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர் சிராங் தெரு, மண்ணடி, சென்னை-1 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கண்ட தகவலை, தமிழ் நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரும் உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு கூட்டுனர் மற்றும் உறுப்பினர் செயலருமாகிய அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1