.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வெளிநாட்டில் இருந்து TV க்கள் கொண்டு வருவது குறைந்தது!

Unknown | 9:20 PM | 0 comments

சென்னை : வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் டி.விக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதில், வேலைவாய்ப்புக்காக செல்வோர்தான் அதிகம். பணிகள் முடியும்போதோ, விடுப்பிலோ தாயகம் வரும்போது, அந்நாடுகளில் இருந்து டி.வி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருகின்றனர். 

தற்போது ரூபாய் மதிப்பு குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் எல்இடி, எல்சிடி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மொத்த விலையை கணக்கிட்டு, அதில் இருந்து 12 சதவீதம் வரி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அவற்றை கொண்டு வரும்போது எந்த பயன்பாட்டிற்கு வாங்கியது, எப்போது வாங்கியது, பயன்படுத்தியதா?, பொருட்களுக்கான வரி ஏற்கனவே செலுத்தப்பட்டதா என்பது குறித்து விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். 

பின்னர், சர்வதேச விமான நிலையங்களில் சோதனைகளும் நடத்தப்படுகிறது. வரி உயர்வு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் எல்இடி, எல்சிடி போன்ற டி.விகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தனியார் மார்க்கெட்டிங் நிறுவன அலுவலர்கள் சந்திரசேகர், அய்யாதுரை ஆகியோர் கூறியதாவது: 

இந்தியாவை ஒப்பிடும்போது, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் எல்சிடி, எல்இடி போன்ற டி.விகளின் விலை குறைவு. ரூ.15,000 வரை குறைவாக இருக்கும். முன்பு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் எல்இடி, எல்சிடி டி.விகளை கொண்டு வந்தனர். அப்போது பெரிய அளவில் வரி வசூலும், கெடுபிடிகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. மத்திய அரசு தற்போது 12 சதவீதம் வரி விதித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து டி.விகள் கொண்டு வருவது குறைந்துள்ளது.

 வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு வருவதை ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒரு மாதத்திற்கு சர்வே எடுத்து வருகிறோம். அதன்படி, சென்னையில் 2012 ஆகஸ்ட் 6ல் தொடங்கி, செப்டம்பர் 6ம் தேதி வரை சர்வே நடத்தினோம். சராசரியாக தினமும் 300 எல்இடி, எல்சிடி டி.விக்கள் வரும். ஆய்வு நடத்திய ஒரு மாதத்தில் மொத்தம் 9,600 டி.விகள் வந்தன. ஆனால், இந்த ஆண்டு நடத்தி வரும் சர்வேயுடன் ஒப்பிடும்போது, சராசரியாக 80 முதல் 85 டி.விகள்தான் வருகிறது. வரி வசூலினால் கொண்டு வரும் டி.விக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1