செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் கிட்னிக்கு ஆபத்து!
செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் விதைப் பை சேதமாகிப்போய் விடும் என்று மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
செல்போன் என்பது ஒரு குட்டி மைக்ரோவேவ் அடுப்பு போலவாம். பொசுங்கிப் போய் விடுமாம் விதைப் பை. மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.
தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்…
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்.. குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான் என்றும் கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.
ஆனால் பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திரு்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார்.
Category:
0 comments