+2,S.S.L.C காலாண்டு பொதுத் தேர்வு - 2013 - அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெள்ளிக்கிழமை (ஆக.30) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 21 வரையிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 12 முதல் 20 வரையிலும் நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும்.
இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்திசெய்யவும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.
பொதுத்தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பான இடத்தைப் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தும் முறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் பொதுவான தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கான வினாக்கள் சி.டி.க்களில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் இந்த வினாத்தாள்கள் ரகசியமாக அச்சடிக்கப்பட்டு தேர்வு நாளன்று விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை
செப்டம்பர் 10 – செவ்வாய்க்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 11 – புதன்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 12 – வியாழக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 13 – வெள்ளிக்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14 – சனிக்கிழமை – கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை நலம், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது)
செப்டம்பர் 17 – செவ்வாய்க்கிழமை – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
செப்டம்பர் 18 – புதன்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக நிர்வாகம்
செப்டம்பர் 19 – வியாழக்கிழமை – தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்), தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) (இரண்டரை மணி நேரம்), புள்ளியியல்
செப்டம்பர் 20- வெள்ளிக்கிழமை – வேதியியல், கணக்குப் பதிவியல்
செப்டம்பர் 21 – சனிக்கிழமை – உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

செப்டம்பர் 12 – வியாழக்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 13 – வெள்ளிக்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14 – சனிக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 17 – செவ்வாய்க்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 18 – புதன்கிழமை – கணிதம்
செப்டம்பர் 19 – வியாழக்கிழமை – அறிவியல்
செப்டம்பர் 20 – வெள்ளிக்கிழமை – சமூக அறிவியல்
Category: மாணவர் பகுதி
0 comments