ஜனவரிக்குள் 269 மாவட்டங்களில் சமையல் காஸ் சிலிண்டருக்கு வங்கிகளில் நேரடி மானியம் சிதம்பரம் தகவல் .
புதுடெல்லி:அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள், சமையல் காஸ் சிலிண்டருக்கு வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் அளிக்கும் திட்டம் மேலும் 269 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் தற்போது மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்களை வாங்கி டீக்கடை, ஓட்டல்களில் பயன்படுத்துகின்றனர். இதனால், அரசுக்கு கூடுதல் மானிய சுமை ஏற்படுகிறது. இதை தடுக்க, ‘உங்கள் பணம், உங்கள் கையில்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியத்தை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி, ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாக கொண்டு வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிலிண்டருக்கு ரூ.435 மானியம் தரப்படுகிறது. இதை பெறும் மக்கள் சந்தை விலையில் காஸ் சிலிண்டரை வாங்கி கொள்ள வேண்டும். முதல் கட்டமாக, 20 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மேலும் 269 மாவட்டங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று மாலை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்துக்கு பின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
நேரடி மானிய திட்டம், 20 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது. இத்திட்டம் செப்டம்பர் 1ம் தேதி மேலும் 34 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதில் 1.47 கோடி பேர் பயனடைவார்கள். அடுத்து, அக்டோபர் 1ல் மேலும் 44 மாவட்டங்களுக்கும், நவம்பரில் 46, டிசம்பரில் 40, ஜனவரி 1ல் 105 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நேரடி மானிய திட்டம் முழுமையாக அமலாகும் போது அரசுக்கு ரூ.9000 கோடி மிச்சமாகும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்..

Category: மாநில செய்தி
0 comments