அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் - பீதியில் சிரியா மக்கள் லெபனானில் தஞ்சம்.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிரியா நாட்டு அதிபர் ஆசாத் பஷ்ஷாருக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். இச்சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் போராளிகள் பகுதியில் சிரியா பாதுகாப்பு படையினர் இரசாயன விஷக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் குழந்தைகள் முதியோர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவை அடக்க அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் சிரியா நாட்டை சூழ்ந்துள்ளன. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனனுக்கலகதிகளாக செல்கின்றனர்.
Category: உலக செய்தி
0 comments