இஸ்லாமிய இளைஞர்கள் ஜமாத்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர்மைதீன் அறிவுரை!
ராமநாதபுரம் மாவட்ட இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க பொதுக்கூட்டம் சின்னக் கடையில் நடைபெற்றது. கூட் டத்துக்கு மாவட்ட தலை வர் வருசை முகமது தலைமை தாங்கினார். மாவட்ட இளை ஞரணி செயலாளர் சுதானா முகமது கிராஅத் ஓதினார். மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி இணை செய லாளர் சிராஜுதீன் வரவேற் றார்.
கூட்டத்தில் கட்சியின் தேசிய பொது செயலாளர் காதர்மைதீன் பேசியதாவது:-
முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடித்தால் மட்டும் தான் தனித்தன்மையை பாதுகாக்க முடியும். வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு தனித்தன்மையை பாதுகாக்க முடியாது. இஸ்லாமியர்க ளுக்கு என தனியாக மார்க்க முறைப்படி தனிச்சட்டம் உள் ளது. அந்த சட்டத்தில் முஸ் லிம்களுக்கு என தனியாக சட்ட பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த சட்டப்படி நடக்க முஸ்லிம்களுக்கு முழு உரிமை உள்ளது. இதனை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இன்றைய இளைஞர்கள் அந் தந்த பகுதி ஜமாத்களுக்கு கட் டுப்பட்டு நடக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வகுக்கப் பட்டுள்ள திருமண சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து சிலர் தொடர்ந்துள்ள வழக்கினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்கொண்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொது செயலா ளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில துணை தலைவர் சபிக் குர் ரகுமான், அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான்,பாசிப்பட் டறை தெரு பள்ளிவாசல் இமாம் முகமது அப்துல் காதிர், உல மாக்கள் அணி அமைப்பாளர் யூனுஸ் ஆலிம், துணை அமைப் பாளர் முகமது யாசின் ஆகி யோர் பேசினர். நகர் செயலா ளர் சாதுல்லாகான் நன்றி கூறி னார்.
Category: சமுதாய செய்தி
0 comments