செப்டம்பர் 3 முதல் துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி.

செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவக்க விழா நடைபெற இருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் முனியப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வினை துவக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சி அமீரகத்துக்கான இந்திய தூதரகம் மற்றும் சில்வர் ஸ்டார் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இக்கண்காட்சிக்கு துபாய் அரசின் சுற்றுலாத்துறை, ஆல் இந்தியா அசோஷியேஷன் ஆஃப் இண்டஸ்டிரீஸ், ஆல் இந்தியா ரைஸ் எக்ஸ்போர்டர் அசோஷியேஷன், தேங்காய் ஏற்றுமதி வாரியம், துபாய் இந்தியன் பிஸினெஸ் & பிரஃபஷனல் கவுன்சில், கேரளா சேம்பர் ஆஃப் காமர்ஸ், காதி கிராம தொழில் கமிஷன், ஜெட் ஏர்லைன்ஸ், லமா டூர்ஸ் உள்ளிட்டவை ஆதரவு நல்கியுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு
Category: துபாய்
0 comments