சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 விமான நிலையங்களை மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கத் தயார்!

சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 4 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கத் தயார் என்று மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது 100 சதவிகதம் பங்குகளையும் தனியார் வசமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட சில விமான நிலையங்களில் பார்க்கிங், பயணிகள் வசதிகள் உள்ளிட்ட சுமாராக 5 சதவிகித பங்குகள்தான் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் இனி 100 சதவிகிதம் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.
Category: மாநில செய்தி
0 comments