முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு கடன் உதவி.
இத்திட்டத்தில் தொழில் முனைவோரின் திட்ட தொகை குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்ச தொழில் திட்டமாக ரூ.100 லட்சம் வரை இருக்கலாம். கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி, தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோர் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 35 வய துக் குள்ளும், பெண்கள்,ஆதி திராவிடர், பழங்குடி யினர், பிற்படுத்தப் பட் டோர்,மிக வும் பிற்படுத் தப்பட் டோர், திருநங்கையர், மாற் றுத்திற னாளிகள், முன் னாள் ராணு வத்தினர் ஆகியவற்றை சேர்ந் தோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு முகாம்
கடனுதவி பெறும்நபருக்கு ஒரு மாதம் தொழில் முனை வோர் பயிற்சி அளிக் கப்படும். இத்திட்டத்தில் 50 சத வீதம் பெண் தொழில்முனை வோ ருக்கு ஒதுக்கீடு செய்யப் பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான உச்சவரம்பு கிடையாது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல் படுத் தப்படும் வேலை வாய்ப் பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற படித்த மற்றும் படிக்காத ஆண், பெண் இருபாலரும் வங்கி கடன்பெற விண்ணப்பமும், ஆலோசனைவழங்கப்பட்டு வருகின்றன.
Category: மாநில செய்தி
0 comments