.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஆகஸ்ட் 16, துபாயில் சிறப்பு ரத்ததான முகாம்.

Unknown | 6:30 PM | 0 comments

ஆகஸ்ட் 16, துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் சிறப்பு ரத்ததான முகாம்
துபாய் : துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய சுதந்திர தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நினைவு தினம் உள்ளிட்டவற்றையொட்டி சிறப்பு ரத்ததான முகாமினை 16.08.2013 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அல் கரூத் பகுதியில் அமைந்துள்ள கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியில் நடத்த இருக்கிறது.
தலைமை விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, சிறப்பு விருந்தினராக துபை லத்திஃபா மருத்துவமனை ரத்ததான வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் ஹைதர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களுடன் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
055 535 87 27, 055 19 63 613, 055 220 72 63
மின்னஞ்சல் : blooddonationfoi@gmail.com
18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம். 
நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஃபியூச்சர் விஷன், கோட்டூர் இண்டிரியர்ஸ் & பர்னிச்சர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, 105.4 ரேடியோ ஸ்பைஸ் ஆகியவை வழங்கியுள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1