121 ஊராட்சிகளில் நாளைகிராம சபைக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் வியாழக்கிழமை (ஆக. 15) கிராமசபைக் கூட்டம் நடத்த, ஊராட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி, தலைவர்கள் ஊராட்சிகளில் மேற்கொண்ட செயல்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடம் கேட்டறிதல் வேண்டும்.
Category: மாவட்ட செய்தி
 


 
 
 
 
 
 
 
 
 
0 comments